Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டௌரியன் நிறுவன லாபம் 2 மடங்கு உயர்வு

டௌரியன் நிறுவன லாபம் 2 மடங்கு உயர்வு

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 73.5 சதவீதம் அதிகரித்து ரூ.56.01 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.32.29 கோடியாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

சுரங்கம், கட்டுமானம், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறைகளுக்குத் தேவையான கனரக இயந்திரங்களைத் தயாரிக்கும் ஒரு முன்னணி இந்தியப் பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனம் டௌரியன் எம்பிஎஸ் ஆகும்.

இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு நிகர லாபம் இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து ரூ.7.65 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.3.67 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 73.5 சதவீதம் அதிகரித்து ரூ.56.01 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.32.29 கோடியாக இருந்தது. வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகைக்கு முந்தைய வருவாய் 82.4 சதவீதம் உயர்ந்து ரூ.12.34 கோடியாக உள்ளது. இதற்கிடையே, பங்குகள் மற்றும் பங்கு உத்தரவாதங்கள் ஒதுக்கீட்டால், ரூ.59.97 கோடி நிதி திரட்டியுள்ளது.

இதில் ரூ.42 கோடி நடைமுறை மூலதனத்துக்கும், ரூ.10.22 கோடி தொழிற்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட மூலதனச் செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யஷ்வர்தன் சுமித் பஜ்லா கூறுகையில், "ஹரித்வாரில் உள்ள ரூர்க்கே தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ஆர்டர்களை விரைவாகச் செயல்படுத்தவும் இந்த நிதி உதவும். மேலும், அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 45 முதல் 50 சதவீத வருவாய் வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்" என்றார்.

முந்தைய செய்தி
16 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் விநியோகம்
அடுத்த செய்தி
தங்கம் விலை உயர்வு; நகை நிறுவனப் பங்குகளுக்கு வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்